இலங்கையின் விவசாய சமூகத்தினரே! பவர்ஸ் உங்களுடன் உள்ளது – நாம் இந்தத் தருணத்தில் ஒன்றிணைந்துள்ளோம்!

இலங்கையின் விவசாய சமூகத்தாருக்கு ஒரு திறந்த கடிதம்

கொழும்பு, திங்கட்கிழமை, 17 மே 2021


இலங்கையைச் சேர்ந்த அனைத்து விவசாய சமூகத்தாருக்கும், ஆயுபோவன்/வணக்கம்!

இலங்கை அரசாங்கம் இரசாயன உரம், கிருமிநாசினிகள் மற்றும் களைநாசினிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்துள்ளமை தொடர்பான செய்தி ஏப்ரல் 22ஆம் திகதி வியாழக்கிழமை முதன் முறையாக வெளியாகியிருந்தது.


124 வருட காலமாக, உரங்கள் மற்றும் தாவர பாதுகாப்பில் பவர்ஸ் முன்னோடியாக திகழ்கின்றது! எமது ஸ்தாபக நிறுவனத்தின் பெயர் “த சிலோன் மனுவர் வேர்க்ஸ்” இனால் எமது வியாபாரம் சேதன முறைகள் மற்றும் இரசாயன உரங்களை பின்பற்றி ஆரம்பித்திருந்தமையை உறுதி செய்வதுடன், பழைய மற்றும் புதிய முறைகளை பின்பற்றி இயங்கி வருகின்றது.

இன்று, பவர்ஸ் உரத் தொழிற்சாலை, உள்ளக தொடர்பாடல்கள் அனைத்திலும் ‘CMW’ என அழைக்கப்படுவதுடன், தென்-கிழக்காசிய பிராந்தியத்தில் காணப்படும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த நவீன தொழிற்சாலையாக அமைந்துள்ளது.

எமது முன்னோடியான ஆர்வம் ஒருபோதும் எம்மைவிட்டு விலகவில்லை என்பதுடன், புத்தாக்கத்துக்கான எமது தாகம், சேதன உரத்தில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள எமக்கு ஏதுவாக அமைந்திருந்தது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மற்றும் உள்நாட்டு சந்தையைச் தயாரிப்புகளை நாம் மதிப்பாய்வு செய்கின்றோம். எமது ஆய்வுகளில் பாரியளவிலான பாற்பண்ணை மற்றும் கோழிப் பண்ணைகளுடன் இணைந்து செயலாற்றல், கொம்போஸ்ட் தயாரிப்பு மற்றும் கழிவு அல்லது உயிரியல் கழிவுகளை சேதன உரமாக மாற்றுவது போன்றன அடங்கியுள்ளன. இரசாயன உரங்கள் மீது வழங்கப்படும் உயர் மானியங்களின் காரணமாகவும், சேதன உரப் பயன்பாட்டினால் குறைந்த உற்பத்தித் திறன் கிடைப்பதனாலும் (மானியம் வழங்கப்படுவதில்லை) சேதன உரத்துக்கு வணிகத் திட்டமொன்றை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு உதவவில்லை.

இரசாயன உரங்களை தடை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் அண்மைய அறிவித்தலின் பிரகாரம், எமது சகல தெரிவுகளுக்குமான ஆய்வுச் செயற்பாடுகளை நாம் துரிதப்படுத்தி, அதனூடாக உங்களுக்கு கடந்த 124 வருட காலமாக வழங்கி விரும் சிறந்த மற்றும் வினைத்திறன் வாய்ந்த சேவைகளை தொடர்ந்து வழங்குவோம் என்பதை அறியத்தருகின்றோம்.

இந்தத் தருணத்தில் நாம் ஒன்றிணைந்துள்ளோம் என்பதுடன் உங்களின் தாவரங்கள் மற்றும் விளைச்சல்களை வளர்ச்சியடையச் செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் உரிய தீர்வுகளை நாம் காண்போம்.

தங்கள் நம்பிக்கைக்குரிய,
ரொல்ஃவ் பிளசர்
(முகாமைத்துவ பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி)


ஜனக குணசேகர
(பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் விவசாயப் பணிப்பாளர்)doctor